கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்ட இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில தப்பியோடியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று(23) பிற்பகல் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் போது சந்தேக நபர்கள் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளனர்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கும், டிப்போச்சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து தப்பியோடிய குறித்த சந்தேக நபர்கள் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன், மேலும் குறித்த சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.