64 ஆவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 64 ஆவது நாளாகவும் இன்று (24) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகள் தொடர்பில் உரிய பதிலை இந்த அரசு வழங்க வேண்டும் எனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், எதிர்வரும் 27 ஆம் திகதி குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்புச் செய்து தங்களுடைய ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like