எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிரமத்தின் மத்தியில் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் நிலையங்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவாக காணப்படுகின்றனர்.

மேலும் பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like