கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட காணிப்பிணக்குகளை தீர்ப்பதற்காக நடமாடும் சேவை

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட காணிப்பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று(24) நடைபெற்றது.

“நிலமெகவர” ஜனாதிபதியின் மக்கள் சேவையின் தேசிய திட்டத்திற்கு அமைவாக, காணி அமைச்சும்,காணி ஆணையாளர் நாயக திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நடமாடும் சேவை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இச்சேவையில் கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட 60 வரையான காணிப்பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

மேலும் நாளைய தினம்(25) கண்டாவளை, பளை, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களில் இந்த நடமாடும் சேவை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like