யாழில் வாள்வெட்டு : அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன்

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் இளைஞன் ஒருவன் வாள் வெட்டுக்கு இலக்காகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்தவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் மந்திகை பகுதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் பிரதீபன் என்ற 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like