கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து பரந்தன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் அதே திசையில் பயணித்த இரு சக்கர உழவு இயந்திரம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கிளநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை , நேற்று (24) பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து ஒன்றுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் பேருந்து சேதமடைநதுள்ளதுடன் பயணிகள் தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like