இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்காக அரச நிதியில் விளம்பரம் மேற்கொண்டமைக்கு எதிராக அரசாங்கம் மருத்துவர் சங்கம், அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் லச்மன் கிரியெல்ல ஆகியோருக்கு எதிராக நிதி மோசடிக்கு எதிரான பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை செய்யவுள்ளது.

சங்கத்தின் செயலாளர் நவின் டி சொய்ஸா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எவ்வித அடிப்படையும் இன்றி இந்த இரண்டு அமைச்சர்களும் தனியார் கல்லூரியை ஆதரிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் இந்த விடயத்தில் பொதுமக்கள் நிதியை துஸ்பிரயோகம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் இந்த கருத்துக்கள் இன்று கூறப்பட்டன.

You might also like