எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம் நிறைவு

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது

இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த போராட்டத்தை விலக்கிக்கொள்ளவதாக கூட்டுத்தாபன பணியாளர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தமது இந்திய விஜயத்தின்போது எரிபொருள் தொடர்பில் ஆவணம் எதுவும் கைச்சாத்திடப்படமாட்டாது என்று பிரதமரிடம் இருந்து கிடைத்த எழுத்துமூல உறுதியை அடுத்தே இந்தப்போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like