சற்று முன் வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பமானது

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (25.04.2017) காலை 10.30மணியளவில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவ் கூட்டத்தில் பிரதேச ஒருங்கினைப்புக்குழு இணைத்தலைவர் காதர் மஸ்தான் ( வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), வடக்கு மாகாண முதலமைச்சருக்கு பதிலாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , சிவசக்தி ஆனந்தன் ( வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) ,  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் , வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.தியாகராஜா, ஜீ.ரி.லிங்கநாதன், செ.மயுரன் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் , பொது அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பொது அமைப்புக்கள் குறிப்பாக கிராமங்களின் பொது அமைப்புக்களின் பிரதிநிதி ஒருவரையாவது அழைக்ப்பட வேண்டும் என  பிரதேச ஒருங்கினைப்புக்குழு இணைத்தலைவர் காதர் மஸ்தான் ( வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களினால் தீர்மானமோன்று எடுக்கப்பட்டது.

 

You might also like