கிளிநொச்சியில் 65ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 65ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உரிய தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like