35ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

காணி உரிமம் கோரி பன்னங்கண்டி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 35ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த போராட்டம் பன்னங்கண்டி, சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கையில்,

எமது குடியிருப்பு காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை.

எனவே இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறு வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like