வவுனியாவில் இரானுவத்தினரால் வசதியற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

 வவுனியா நந்துமித்தகம பகுதியிலுள்ள வசதியற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இப்பகுதியில் கடந்த யுத்தகாலத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வின் பின்னர் திரும்பவும் வந்து மீள் குடியேறிய பொதுமக்களுக்கு மேஜர் ஜெனரல் றுவான் குலதுங்க தலைமையில் 10குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் நல்லின மாடுகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான நிதியுதவியினை நுகேகொட ஸ்ரீ தம்மாராம விகாராதிபதி யூ. கே. போகம்பேவினால் வழங்கிவைக்கப்பட்டது.

You might also like