வவுனியாவில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் நேற்று இரவு வெட்டுக்காயத்திற்குள் இலக்கிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று 24.04.2017 இரவு 8.30மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் தனக்கு பணம் கொடுக்கவேண்டியவர் ஒருவரிடத்தில் சென்று தனது பணத்தினைக் கேட்டுள்ளார். இதயடுத்து இருவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கவேண்டிய நபரும் அவரது மகனும் சேர்ந்து பணம் கேட்டு வந்தவர் மீது சரமாரியாக தாக்கி வெட்டுக்காயத்தினை ற்படுத்தியுள்ளனர். இதையடுத்து நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முத்துராசா உதயசேகர் 52வயதுடைய மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்தவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

வெட்டி காயத்தை எற்படுத்தியுள்ளதாக தெரிவித்து தந்தை, மகன்  இருவரையும் பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா

You might also like