கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு நோயாளர் காவு வண்டிகள் வழங்கிவைப்பு

வடமாகாணத்திற்கு என 2016 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கு நோயாளர் காவு வண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

தலா 9 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த நோயாளர் காவு வண்டிகள் அவசர் சிகிச்சை பிரிவிற்காக மட்டுமே செயற்படும் எனவும் வடமாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 நோயாளர் காவு வண்டிகள் அவசர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மத்திய அரசாங்கத்தில் இருந்தும் 21 நோயாளர் காவு வண்டிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தரமான நோயாளர் சேவையினை வழங்குவதற்கு வடமாகாண சுகாதார அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like