பரந்தன் கோரக்கன்கட்டு பகுதியில் வாகன விபத்து : ஒருவர் படுகாயம்

பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதி கோரக்கன்கட்டு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோரக்கன்கட்டு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய செல்வநாயகம் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like