வவுனியாவில் 27ம் திகதி பூரண கடையடைப்பு – வவுனியா வர்த்தகர் சங்கம்

பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக இன்று (25.04.2017) இரவு இடம்பெற்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் முடிவு எட்டுப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. 

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர்போராட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு,கிழக்கு பகுதிகளில் பூரண ஆதரவுடன் முழு அடைப்பினை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியா வர்த்தகர் சங்கம் இன்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆதரவினை வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

You might also like