ஹர்த்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் ஆதரவு

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், பட்டதாரிகளின் கோரிக்கை மதிப்பளித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் என்பவற்றை வலியுறுத்தி இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இன, மத,மொழி பேதங்களைக் கடந்து நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு தாமும் ஆதரவை வழங்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் தாமும் எமது செயற்பாடுகளை முடக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்போம் என அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like