யாழில் 2 இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் 11 பேருக்கு தொடர்பு
யாழ், மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாள்வெட்டு தாக்குதலானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் லிங்கேஸ்வரன் என்ற 24 வயதுடையவரும், தினேஷ் என்ற 28 வயதுடைய இருவருமே வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 11 பேர் தொடர்புபட்டிருப்பதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பிலான மேலதிக விசரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.