கிளிநொச்சியில் உள்ள ஆலயத்தில் பாடல்களை ஒலிபரப்ப தடைவிதிக்கும் இராணுவத்தினர்

கிளிநொச்சியில் அமையப்பெற்ற  வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமான ஆலயமானது மூர்த்தி , தீர்த்தம் , தலம் என மூன்றும் ஒருங்கே ஆகம விதிகளுடன் அமையப்பெற்ற  இந்து ஆலயத்தின் நீண்ட வரலாற்றினை எடுத்தியம்புவதற்கான சான்று  உள்ள ஆலயத்திலும் அதனை அண்டிய ஆலயத்திலுமே இந்த நிலமை காணப்படுகின்றது.

இவ்வாறு அமையப்பெற்ற மேற்படி ஆலயத்தின் அருகில் 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் ஆலயத்தின் அருகில் மிகவும் இரகசியமான முறையில் ஓர் பௌத்த விகாரையினை அமைத்தனர். பெளத்த மக்களே வாழாது இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பிரதேசத்தில் இவ்வாறு திருட்டுத்தனமாக கட்டப்பட்ட பௌத்த ஆலயத்திற்காக ஆண்டாண்டு காலமாக வீற்றிருக்கும் ஆலயத்தின் வழிபாட்டு முறை தடுக்கப்படுகின்றது.

ஆலயத்தின் அதிகாலைப் பூசை 5 மணிக்கு இடம்பெறுவது வழமை . இந்த பூசை நேரத்திற்காக அதிகாலை 4.30ற்கு திறக்கப்படும் ஆலயத்தில் துயில் எழுப்பல் பாடல்களும் பூசை ஆராதனைகளும் ஒலி பரப்புச் செய்யப்படுவது வழமையாகும். இந்த நிலையில் அண்மையில் திருட்டுத்தனமாக கட்டப்பட்ட புத்தவிகாரையில் காலையில் இடம்பெறும் மத பூசையின்போது ஆலய ஒலிபரப்பு இடையூறாக உள்ளதாக கூறப்பட்டு ஒலிபரப்பு தடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இதற்கு அண்மையில் உள்ள ஆலயத்தில் இடம்பெறும் அதிகாலைப் பூசையின்போதும் பயன்படுத்தப்பட்ட ஒலி பெருக்கியினையும் அருகில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளது. இன , மத சுதந்திரத்திற்கு இடையூறாக அப்பகுதி மக்களின் அனுமதியின்னி அடாத்தாக தினக்கப்பட்ட ஆலயங்களிற்காக ஆண்டாண்டு காலமாக இருந்த ஆலயங்களின் வழிபாட்டு முறைகள் தடுக்கப்படுவது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் இவ்வாறு தடைபோடுவது இன அழிப்பின் அடையாளங்களாகவே கருதப்படும் எனவும் அருகில் உள்ள மக்களும் ஆலய பக்தர்களும்  சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த விடயம்தொடர்பில்   ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கான தடை விதிக்கப்பட்டதனை மறுக்காத போதிலும் இப்போது இல்லை என ஒருவர் கூறுகின்றார். மற்றும் ஒரு உறுப்ஙினரோ அவ்வாறு இல்லை என கூறுகின்றனர்.

இருப்பினும் குறித்த இரு ஆலயத்திலும் அதிகாலையில் ஒலிபரப்பப்பட்டு வந்த பக்திப்பாடல்களோ அல்லது துயில் எழுப்பிகளோ தற்போது ஒலிபரப்புவது கிடையாது. இதற்கு காரணம் படையினரே என்பது மக்களின் அசைக்க முடியாத கருத்தாகவுள்ளது. –

You might also like