தந்தை செல்வாவின் 40ஆவது சிரார்த்த தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 40ஆவது சிரார்த்த தினம் இன்று 26.04.2017 (புதன்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள செல்வாவின் சிலைக்கு அருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் அனுஸ்டிக்கப்பட்டது

வட மாகாண சுகாதார அமைச்சரின் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா , வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயுரன் மற்றும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், வர்த்தக சங்க தலைவர் , வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like