சுமந்திரனை கொலை செய்ய முயற்சி : முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கைது செய்யப்பட்ட ஐந்து முன்னாள் போராளிகளையும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் போராளிகள் ஐவர் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like