13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மாமா கைது!

புத்தளம் – முந்தலம பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தலம பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளாலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் தாய் வெளிநாட்டுக்கு பணிப் பெண்ணாக சென்றுள்ளார்.

எனவே குறித்த சிறுமி அவரது அத்தையின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வந்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றில்முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் முந்தலம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like