வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டி கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டியொன்று வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நெளுக்குளம் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் நேற்று தமிழ், சிங்கள புதுவருட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த இரவு நிகழ்விற்கு வருகை தந்த ஒருவருடைய முச்சக்கர வண்டியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது.

இவ்வாறு காணாமல் போயிருந்த முச்சக்கர வண்டி மன்னார் வீதியில் பம்பைமடு பகுதி வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like