மைத்திரிபால சிறிசேன சிறந்த உதாரணம்! பாராட்டும் சர்வதேச நாடாளுமன்ற தலைவர்

உலக நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதாரணமாக உள்ளார் என்று சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தபோது அவர் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்

தமது ஜனாதிபதி பதவிக்கு உரித்தாக உள்ள நிறைவேற்று அதிகாரங்களை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளதன் மூலம் மைத்திரிபால இந்த உதாரணத்துக்கு உட்பட்டவராக உள்ளார் என்று சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத் தலைலர் சபார் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

உலகின் சனத்தொகையில் இன்று 50வீதமானோர் 30வயதுக்கும் உட்பட்ட இளையோர் ஆவர்.

எனினும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்த உலக நாடுகளின் நாடாளுமன்றங்களில் 1.9 வீதமான 30வயதுக்கு உட்பட்டவர்களே உள்ளனர் என்றும் சௌத்ரி சுட்டிக்காட்டியுள்ளார்

You might also like