யாழில் கிணற்றின் கப்பி கயிற்றில் தொங்கிய நிலையில் சடலம்

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் முதியவர் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிணற்றுக் கப்பிக் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே குறித்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நிச்சாமம் சங்கானைப் பகுதியினை சேர்ந்த நாகன் தில்லைநாதன் என்ற 74 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like