டெங்கு நுளம்புக் குடம்பிகள் இனங்காணப்பட்டால் அதிபருக்கு எதிராகவும் வழக்கு!

பாடசாலை வளாகத்தில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் இனம் காணப்பட்டால் பாடசாலை அதிபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஆரமபிக்கப்பட்டதையடுத்து டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பாடசாலை வளாகத்தை சுத்தமாக்கும் வேலைத்திட்டம் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன டெங்கு ஒழிப்புப் பிரிவிற்கு இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சின் பணிப்புரைக்கமைய பாடசாலைகளை சுத்தமாக்கும் நடவடிக்கை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாம் தவணை இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 28ஆம், 29ஆம் திகதிகளில் பாடசாலை சுற்றாடல் பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது நுளம்பு குடம்பிகள் பாடசாலை வளாகத்திலிருந்து இனங்காணப்பட்டால், பாடசாலை அதிபர்களுக்கு எச்சரிக்கையுடன் ஒருமாத கால அவகாசம் வழங்கப்படும்.

அதன் பின்னரும் நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டால் பாடசாலை அதிபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like