பூரண ஹர்த்தால்: வவுனியாவில் இயல்பு நிலை முடங்கியது

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது

வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் இ.போ.சபை பேருந்துக்களும் சேவையில் ஈடுபடவில்லை. இருப்பினும் தூர இடங்களுக்கான போக்குவரத்தினை இ.போ.சபை பேரூந்துக்கள் மேற்கொள்கின்றன.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையால் வவுனியா நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. இயல்பு நிலை முற்றாக முடக்கமடைந்துள்ளதுடன் வீதிகளில் பொலிசார் நடமாட்டமும் ஆங்காங்கே காணப்படுகின்றது.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண ஹர்ததாலுக்கு பல தரப்பினரிடமிருந்தும் பூரண ஆதரவு வவுனியாவில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

You might also like