வவுனியாவில் ஏ9 வீதியினை மறித்து போராட்டம் : பொலிஸார் குவிப்பு

வவுனியா ஏ9 வீதியினை இன்று (27.04.2017) காலை 8.00மணி தொடக்கம் 9.00மணிவரை சுமார் ஒரு மணித்தியாலயம் மறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இதனால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

போராட்ட இடத்திற்கு வந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீதியை வழிமறித்து போராட்டம் மேற்கொள்ளவேண்டாம் உங்களுடைய போராட்ட இடத்திலிருந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து ஒருமணி நேரம் மேற்கொண்ட வீதி மறிப்பு போராட்டத்தினை கைவிட்டு தமது போராட்ட இடத்தில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like