யாழில் பூரண ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

யாழில் பூரண ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் நகர பகுதி வெறிச்சோடிக் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like