வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன் கடந்த (19.04.2017) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்ததில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ச்சியாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் பொலிஸ் சாஜன் நேற்று (26.04.2017) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிலந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

You might also like