முள்ளியவளை மேற்கு கிராமத்தில் பாவனையற்று பாழடையும் நூல்நிலையம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியவளை மேற்கு கிராமத்தில் நூல்நிலைய கட்டிடமானது எவ்விதமான பாவனையும் அற்று பாழடையும் நிலையில் இருப்பதாக பொதுமக்களும்  வாசகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அக்கட்டிடத்தை தமது ஆழுகையின் கீழ் வைத்திருக்கும் கிராம மட்ட அமைப்பினரின் அக்கறையின்மையே இவ்வாறான நிலைக்கு காரணம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி நூல் நிலையத்துக்கு பிரதேச சபையினரால் நாளாந்த வாராந்த பத்திரிகைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்த கரைதுறைபற்று பிரதேசசபையின் முள்ளியவளை உப அலுவலகத்தினர் தயாராக இருக்கின்ற போதும் குறித்த கிராம மட்ட அமைப்பினரும் கிராம மட்ட அரச அலுவலர்களினதும் அக்கறையின்மையுமே இவ்வாறான நிலைக்கு காரணம் என பிரதேசமக்கள் சுட்டிக்காட்டும் அதேவேளை இவ்வாறு இயங்காமல் இருக்கும் குறித்த நூல்நிலையத்தை பிரதேச சபையினர் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துவதனூடாக மக்களும் வாசகர்களும் பயனடைவர் என பொதுகக்கள் குறிப்பிடுகின்றனர்.

You might also like