ஹர்த்தாலுக்கு ஆதரவு: வட. மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்றைய (வியாழக்கிழமை) வட. மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீல மீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் வலி சுமந்த பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் காலை நடைபெறவிருந்த வடமாகாண சபையின் 91ஆவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை சபை கூடியபோது, வடக்கு, கிழக்கில் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அதற்கு வடமாகாணசபை தனது பூரண ஒத்துழைப்பை வழங்குகிறது எனத் தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முதலமைச்சரின் கருத்தின் பின்னர் அமர்வு ஒத்திவைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி சபை அமர்வுகள் எதிர்வரும் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You might also like