வவுனியாவில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் உணவகங்கள் திறப்பு : பொதுமக்கள் விசனம்

வவுனியாவில் பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக கடந்த 25.04.2017 இரவு இடம்பெற்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டு அனைத்து வர்த்த நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (27.04.2017) மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண ஹர்ததாலுக்கு பூரண ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளது.

எனினும் வவுனியா ஹாரவப்போத்தானை பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்த போதும் ஒரு சில உணவகங்கள் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமது உணவகங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

You might also like