பெண்ணின் கழுத்தை வெட்டி கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை உடனடியாக கைது செய்ய உத்தரவு

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் வயோதிபப் பெண்ணொருவரின் கழுத்தை வெட்டிகொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரை கடந்த மார்ச் மாதம் இராணுவத்தினர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் காட்டிற்குள் இழுத்துச்சென்று கழுத்தில் வெட்டியதாகவும், குறித்த பெண்ணை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சி பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபரை இதுவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

ஆனால் குறித்த பெண் தன்னை இராணுவ சிப்பாய் ஒருவரே வெட்டியதாக தெரிவித்துள்ளார்..

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொண்டபோது சாட்சிக்காரரான குறித்த பெண்ணுக்கு சந்தேகநபர் தொடர்பான மாதிரிப்புகைப்படம் ஒன்று காட்டப்பட்டது.

குறித்த மாதிரிப்படத்தை அடையாளம் காண்பிக்க முடியாது என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சந்தேகநபர் தொடர்பான தகவல் முறைப்பாட்டாளருக்கு தெரிந்திருப்பின் நீதிமன்றத்திற்கு உடடினடியாக அறிவிக்கும் படியும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தின் போது அப்பகுதியில் கடமையில் இருந்த இராணுவத்தினரை அடையாளம் காட்டுமாறு முறைப்பாட்டாளரை கூட்டிச்சென்று விசாரணை செய்யுமாறும் மன்று கட்டளையிட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 8ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.

You might also like