37வது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்
கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
நீண்ட காலமாக தாம் வாழ்ந்து வரும் குறித்த காணியில், அடிப்படை வசதிகள் மற்றும் முறையான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றுத்தருமாறு கோரி குறித்த பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் 37 நாட்களாகியும் எந்தவித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் இன்றளவிலும் இவர்களது போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது