15 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பொலன்னறுவை பகுதியில் 15 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த மாணவரின் தந்தை அறைக்கு சென்று பார்த்த போது, தன் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அவதானித்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனைகள் பொலன்னறுவை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் இது வரையில் தெரியவரவில்லை என்றும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like