கழிவுகளால் நிறையும் முல்லைநகர் கடற்கரை கவனமெடுக்காத கரைதுறைப்பற்று பிரதேசசபை!

முல்லைத்தீவு நகரத்திற்கு அண்மையாக உள்ள சுற்றுலாமையமான கடற்கரை பிரதேசம் மற்றும் அதனை சூழ உள்ள பிரதேசங்கள் குப்பைகளாலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்களாலும் நிறைந்து காணப்படுவதால் தமது பொழுது போக்கிற்காக ஒன்று கூடும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி உள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிகவும் பிரபல்யமானதும் பெருமளவு மக்கள் தமது ஓய்வு நேரங்களை இனிமையான கழிப்பதற்கு ஒன்று கூடும் இடமாகவும் காணப்படும் இப்பிரதேசத்தில் காணப்படும் இவ்வாறான கழிவுகளை சீராக அகற்றுவதில் கரைதுரைப்பற்று பிரதேச சபையினரின் அசமந்தப்போக்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிறுவர்கள் என பலதரப்பட்டோர் பாதிக்கப்படுவதுடன் சுற்றாடலும் இயற்கையான கடற்கரையோரமும் மாசடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆகவே சம்மந்தப்பட்ட தரப்பினர் இதனை கருத்தில் கொண்டு குறித்த பிரதேசத்தை நாளாந்தம் சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டு கோள் விடுக்கின்றனர்.

இதேவேளை இப்பிரதேசத்தில் கழிவகற்றும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கும் பிரதேச சபையினர் தமவு வருமானத்தை பெருக்கும் நடவடிக்கைகளிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனரே தவிர இயற்கை எழில்கொஞ்சும் இவ்வாறான இடங்கள் மற்றும் நகர் பகுதிகளை அழகுபடுத்தி பேணுவதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You might also like