ஆயுத முனையில் கடத்தப்பட்ட இருவரும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில்

கம்பளையில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட இருவரும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

கெப் ரக வாகனங்களில் ஆயுத முனையில் இரண்டு பேர் கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு கடத்தப்பட்டதாக கூறப்படும் இருவரும் விசாரணைக்களுக்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பின்னர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த இவ்வாறு இருவரும் கைது செய்பய்பட்டுள்ளனர்.

ஆயுதம் தரித்த நபர்கள் கடந்த 25ஆம் திகதி பஸ் நடத்துனர் ஒருவரையும் மற்றுமொரு நபரையும் கடத்திச் சென்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தால் கம்பளையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like