உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று அல்லது நாளை?

உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்யுமாறு கோரி 58,593 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த விண்ணப்பங்கள் மீளாய்வு செய்யப்பட்டு மீளவும் பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, இன்று அல்லது நாளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணைய தளத்தின் ஊடாக மீளாய்வு செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like