கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் நீலங்களின் சமர் ஒரு முன்னோக்கிய பாச்சல்!

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டியானது ஒரு முன்னோக்கிய பாச்சலாகவே அமைந்து வருகிறது.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும், கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும் இடையே வருடந்தோறும் இடம்பெறுகின்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டி பாடசாலை மட்டங்களுக்கு அப்பால் சமூகத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற அளவுக்கு மாறி வருகிறது.

அதிலும் கடந்த வருடம் முதல் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இந்த இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்களும் இந்த துடுப்பாட்டம் தொடர்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

ஒரு சிலர் போட்டியை கண்டு கழிப்பதற்கு வருகை தரவுள்ளதாகவும் பாடசாலை தகவல்கள் தெரிவிக்கிறது.

அந்தளவுக்கு கிளிநொச்சியின் நீலங்களின் சமர் முக்கியம் பெற்று வருவது எதிர்கால கிளிநொச்சியின் துடுப்பாட்டத்திற்கு ஒரு பலமே.

2008 ஆம் ஆண்டு முதல் கடினபந்து போட்டியாக மாற்றம் பெற்ற நீலங்களின் சமா பின்னர் 2013 வரை நாட்டு சூழல் காரணமான இடம்பெறவில்லை.

மீண்டும் 2014 முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு மெல்ல மெல்ல முன்னோக்கி நகர்ந்து தற்போது அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றம் பெற்றிருக்கிறது.

இதுவரை ஏழு போட்டிகள் இடம்பெற்றிருக்கிறது அதில் இரண்டு போட்டிகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், இரண்டு போட்டிகளில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியும், வெற்றிப்பெற்;றுள்ளதோடு மூன்று போட்டிகள் சமனிலையில் நிறைவுபெற்றிருக்கிறது.

இம்மாதம் 28,29 திகதிகளில் இடம்பெறவுள்ள இந்தப்போட்டி எட்டாவது போட்டியாகும். எனவே விறுவிறுப்பு மிக்க போட்டியாக இது மாறியிருக்கிறது.

இந்தப்போட்டிகள் சிறப்பாக இடம்பெறுவதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக ஏயர்ரெல் தொலைதொடர்பு நிறுவனம் அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் நிதி அணுசரனையே போட்டிகள் சிறப்புற இடம்பெறுவதற்கு பிரதான காரணமாகும்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற மிகப் பிரபல்யமான துடுப்பாட்ட போட்டியான வடக்கின் சமர்போன்று கிளிநொச்சியில் நீலங்களின் சமர் மாற்றம் பெற்று வருகிறது.

கிளிநொச்சியில் இந்தப்போட்டியானது துடுப்பாட்டத்தின் மீது இளைஞர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

அத்தோடு இரண்டு பாடசாலைகளுக்கும் இடையேயான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது.

அத்தோடு போட்டியாளர்களும் சரி, இரண்டு பாடசாலைகளினதும் மாணவர்களும் சரி இதுவரை நடந்த எந்த போட்டி நிகழ்வுகளிலும் வன்முறைகளில் ஈடுப்பட்டது கிடையாது.

போட்டியாளர்கள் நடுவரின் எந்த தீர்ப்பையும் ஏற்று விளையாட்டுக்குரிய பண்புகளோடு நடந்துகொள்வதனையும், அவ்வாறே ரசிகர்களான மாணவர்களும் நாகரீகமாக மைதானங்களில் நடந்துகொள்வதனையும் ஒரு சிறப்பு அம்சமாகவே கூறமுடியும் எனவே நீலங்களின் சமர் கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் ஒரு முன்னோக்கிய பாச்சலாகவே அமைகிறது.

இது விளையாட்டை மட்டுமன்றி பரஸ்பர நல்லுறவையும், பண்புகளையும் வளர்கிறது. என்பதிலும் ஜயமில்லை.

2017 நீலங்களின் சமர் துடுப்பட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி அதிபர் மு.இரவீந்திரனின் வழிகாட்டலில் களமிறங்குகிறது.

அவ்வாறே கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி அதிபர் கி.விக்கினராஜாவின் வழிகாட்டலில் களமிறங்குகிறது.

மத்திய கல்லூரி அணியின் முகாமையாளராக ஆசிரியர் கஜீபனும் உதவி ஆசிரியராக லாவண்ஜனும்,பயிற்றுவிப்பாளராக அஜித் அன்ரனியும் உள்ளனர் .

இந்துக் கல்லூரியின் அணியின் முகாமையாளராக ஆசிரியர் சிவலிங்கமும், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் ஹரிகரன் பயிற்றுவிப்பாளராக கீர்த்தன் காணப்படுகின்றனர்.

You might also like