மல்லாவி ஆதார வைத்தியசாலை தாக்குதல் சம்பவம்: நோயாளர் நலன்புரி சங்கத்தினர் போராட்டம்

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் ஈடுப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு முன்பாக இன்று (28) காலை 09, மணியில் இருந்து 10, மணி வரை அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் 12.30 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது அத்துமீறி உள்நுழைந்து ஒரு குழுவினர் அடாவடித்தனம் புரிந்ததுடன், நோயாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்தினால், வைத்தியசாலை சொத்துக்களுக்கும் அதிக சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

You might also like