நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் புலி உறுப்பினர் மேன்முறையீடு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏவுகணை செலுத்தும் பிரிவில் உறுப்பினராக இருந்த ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏவுகணை செலுத்தும் பிரிவில் உறுப்பினராக இருந்தவராக கூறப்படும் இராசதுறை ஜெகன் என்பவரே இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

பலாலியில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோவ் 32 வகை விமானத்தின் மீது, வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியமைக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை ஒப்பு கொண்டு, பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அவர் வாக்குமூலம் வழங்கி இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த வாக்குமூலம் நீதியானதா? இல்லையா? என்பது தொடர்பில் அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், குறித்த வாக்குமூலம் நீதியானதே என்று நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இராசதுரை ஜெகன் என்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தாக்குதல் வழக்கில் கைதான மேற்படி நபரையும், மற்றொருவரையும் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like