எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு தொடக்கம் விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள 15 மே தினப்பேரணிகளுக்காக 2 ஆயிரத்து 600 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில், வாகன போக்குவரத்தை ஒழுங்கமைப்பதற்காக மேலும் ஆயிரத்து 500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்,மே தினப்பேரணிகள் காரணமாக கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு தொடக்கம் விசேட போக்குவரத்து திட்டமொன்று செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like