கிளிநொச்சியில் தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 68ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதில் தரக்கோரி அவர்களது உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்,

நல்லாட்சி அரசு ஆட்சியமைத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகள் தொடர்பில் இது வரையில் எந்தவித தீர்வும் வழங்கப்படவில்லை.

எனவே எங்களது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்க வேண்டும் அல்லது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மறைமுக தடுப்பு முகாம்களை நாங்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

You might also like