சற்று முன் வவுனியா கற்குழியில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு

வவுனியா கற்குழி பகுதியல் இன்று (04.01.2017) இரவு 09.50 மணியளவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் புரிந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புதுவருட தினத்தன்று வவுனியா, கற்குழி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.

இச் வாள் வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சையின் பின்னர் இன்று (04.01.2017) மாலை வீடு திரும்பியதையறிந்த சிலர் இரவு 9.45மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியவரை தாக்க முயன்றுள்ளனர்.

குறித்த வீட்டார் குக்கூரலிட்டு சத்தமிட்டமையினால் முச்சக்கரவண்டியில் வந்த நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

You might also like