14 கையடக்க தொலைபேசிகளுடன் இளம் ஜோடி கைது

பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் ஜோடி, கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைதாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும், தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது 14 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 40,000 ரூபா ஆகியன சந்தேகநபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like