வடபகுதியில் பிரமாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள இந்தியா!

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் தம்புள்ளை – திருகோணமலை அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்காக இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது இந்திய அரசின் சார்பில் இந்திய நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கை தினமும் புதிதாக 23 கிலோ மீற்றர் நெடுஞ்சாலைகளை நிர்மாணித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கும் நெடுஞ்சாலைகளை நிர்மணிப்பதற்காக இந்தியாவின் நிபுணர்களை வழங்க தயாராக இருப்பதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

You might also like