புளியங்குளத்தில் முதிரை மரகடத்தல் – இருவர் கைது

வவுனியா – புளியங்குளம் பழையவாடி பகுதியில் முதிரை மரக்கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா புளிங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட முதிரை மரங்கள் சுமார் 400,000 ரூபா பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த கடத்தலில் சம்மந்தப்பட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளை இவர்கள் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like