கிளிநொச்சி தருமபுரத்தில் அரிய வகை மான் ஒன்றை வேட்டையாடிய நபர் கைது!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் அரிய வகை மான் ஒன்றை வேட்டையாடி விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் தருமபுரம் பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

தருமபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கல்லாறுக் காட்டுப்பகுதியில் இருந்து அரியவகை மான் ஒன்றை நபர் ஒருவர் வேட்டையாடி மான் இறைச்சியை விற்பனை செய்துள்ளார்.

மான் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருப்பதாக பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம், எம். என். டீ. சதுரங்கவின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சந்தேக நபரை முற்படுத்திய போது, நீதிபதி 7000, ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்புவழங்கியதுடன், சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like