வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய பொலிஸார் குவிப்பு

வவுனியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள இந்திரன் விடுதியில் இன்று (29.04.2017) காலை 10.30மணிக்கு இடம்பெறவுள்ளது. 

இக் கூட்டத்தினை குழப்பும்  விதத்தில் சிலர் ஈடுபட இருப்பதாக வவுனியா நீதிமன்றில் உத்தரவு பெற்று புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளர்.

இதனால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

You might also like